கடந்து போன இடத்திற்கு
நதிகள் மீண்டும்
திரும்புவதில்லை...
நடந்து போன தடத்திற்கு
கால்கள் மீண்டும்
வருவதில்லை..
சந்திக்கும் ஒவ்வொரு
திருப்பங்களையும்
சிந்தித்து எதிர்
கொள்ளுங்கள்...
விளைவுகள் சீர் கேடாகும்
வாய்ப்புகள் வரலாம்..
வளைவுகள் நேர் கோடாகும்
வாய்ப்புகள் வருவதில்லை...
வளைவுகளில்
கண்ணாடியைப்
பாருங்கள்..
வாழ்க்கையில்
முன்னோடியைப்
பாருங்கள்...
No comments:
Post a Comment