நேரம் தவறாமை....
மண்ணோடு போராடினால் தான் விதை மரமாக முடியும்... வாழ்வோடு போராடினால் தான் நீ வரலாறு படைக்க முடியும்.
🌸🌺🌸🌺🌸🌺
வாழ்க்கையில், எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், தீர்வு ஒன்று தான், அது தான் மனதிடம்.
🌸🌺🌸🌺🌸🌺
நாம் அமைத்துக் கொள்வது அல்ல
வாழ்க்கை
நமக்கு அமைவது தான் வாழ்க்கை.
🌸🌺🌸🌺🌸🌺
வருத்தத்தை ஒரு சிலரே
புரிந்து கொள்கிறார்கள்.*
மற்றவர்கள் கதை கேட்கவே
விரும்புகிறார்கள்.
🌸🌺🌸🌺🌸🌺
எப்பவும்
எழும்பில்லாத நாக்கு
இருபுறமும் பேசும். ஒருவர் இல்லாத போது பேசுவதற்கு செய்தி வேண்டும் என்பதற்காக விமர்சனம் செய்ய வேண்டாம். கோவில் தூண் என்றாலும் காது இருக்கும் நீங்கள் பேசும் விமர்சனம் பரவி வருகிறது.
🌸🌺🌸🌺🌸🌺
விதைகள் தங்களுக்குப் பிடித்த இடத்தைத் தேடி முளைப்பதில்லை, அதற்கு கிடைத்த இடத்தை வைத்துக்கொண்டு செடியாகவோ மரமாகவோ தன்னை உருவாக்கிக் கொள்கிறது.
🌸🌺🌸🌺🌸🌺
அதேபோல்தான்
மனித வாழ்க்கையும்
இருக்க வேண்டும் .
விழுந்து விட்டோமோ என்று எண்ணாமல் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து நின்று வாழ்ந்து காட்டுவது சிறப்பு.
🌸🌺🌸🌺🌸🌺
அனைவரும் நல்லவர்கள்
என்று நீங்கள் நினைப்பதில் தவறில்லை.
ஆனால் எல்லா நேரங்களிலும்
அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்று நினைப்பதுதான் தவறு.
🌸🌺🌸🌺🌸🌺
எந்த செயலுக்கும் வழிமுறை என்பது மிக முக்கியம். சரியான தூண்டுதல் மட்டும் கிடைத்து விட்டால் மலையளவு வேலை கூட நொடிப்பொழுதில் முடிந்துவிடும்......
🌸🌺🌸🌺🌸🌺
வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய விரும்புவர்கள் கொடுத்த வாக்கினை தவறாமலும் நேரம் தவறாமலும் இருந்தால் எப்போதும் வெற்றி பெற முடியும்.....!.!
🌸🌺🌸🌺🌸🌺
கெட்டிக்காரனுக்கு எதுவும்
பெரிய பாரமில்லை;
உழைப்பாளிக்கு எதுவும்
அதிக தூரமில்லை;
நன்கு கல்வி பயின்றவனுக்கு
எந்த இடமும் வெளிநாடு இல்லை;
இனிமையாகப் பேசுபவனுக்கு வேண்டாதவன் எவனுமில்லை.
🌸🌺🌸🌺🌸🌺
Comments
Post a Comment