உடம்பு சரி செய்ய
உதவும் ஊசி கூட
குத்தினால் வலிக்கும்
என்கிற போது,
உன் வாழ்க்கையை சரி செய்ய நீ கஷ்டப்பட்டு உழைத்தே ஆக வேண்டும்.
நல்லதோ கெட்டதோ
அனுபவங்களை
நீ பெற்றால் மட்டுமே,
இங்கு வாழ்க்கை என்னும் புத்தகத்தின் பக்கங்கள் பூர்த்தியடைகின்றது.
முடியாது என்று நீ தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும்,
ஏதாவதொரு வகையில்
அதை வெல்லப் போகும்
யுக்தி புதைந்திருக்கும்.
வெற்றி என்பதை அடைய வேண்டுமா?
உன் மீதான விமர்சனங்களையும் தேவையில்லாத விவாதங்களையும் பொருட்படுத்தாதே,
பாதையில் வந்தக் கற்கள், முட்களைப் பார்த்து பயந்து இருக்காதே,
வரப் போகும் புற்கள், பூக்களைப் பார்த்து மயங்கியும் பார்க்காதே,
திறந்த அறைக்குள்ளும் ஒரு இருள் உண்டு,
மூடிய கதவிற்கும் ஒரு சாவி உண்டு.
எதிலும் மனதை அடைத்து வைக்காதே,
எந்த மாற்றமும் மாறும், அந்த மேகத்தைப் போல இருந்தால் வெற்றி நிச்சயம்.
இன்றைய நாளை இனிமையாகத் தந்தமைக்கு நன்றி.
நாளையப் பொழுது அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்.
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம்,
எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
நாளையப் பொழுது நல்லபடி விடியட்டுமே.
இனிய இரவு வணக்கம்.
A Big Collection of Wishes, Wallpapers, quotes for your Friends, families, Relatives.......
Comments
Post a Comment