சிந்திக்க ஒருநொடி...
வார்த்தைகளை மறந்து விட்ட ஒருவரை தேடிக் கண்டுபிடியுங்கள்
அவரின் அருகில் அமருங்கள்
அவரின் இருப்பை உணருங்கள்
அவரிடம் மெய்யிருப்பின் மையம்
ஆழமாக பதிந்துள்ளது
வார்த்தைகள் நிரம்பியுள்ள ஒருவரிடம் பேசுவது மிகவும் கடினம்
அவரால் பேசத்தான் முடியும்
ஆனால்
அவரால் காது கொடுத்து கேட்க முடியாது
திரும்ப திரும்ப சொல்வதால்
வார்த்தைகளின்
தோற்ற மயக்கம் உங்களைக்
கவர்ந்து விடுகிறது
வார்த்தையை உண்மை என்று நினைத்து விடுகின்றீர்கள்
வார்த்தைகள் ஒரு குறியீடு
போன்றவைகள்தாம்
அன்பை மூடி மறைக்க முடியாது
அன்பு உண்மையில் இருக்குமானால்
அங்கு வார்த்தைகள்
தேவை இல்லை
மனிதனின் உள்ளே பாருங்கள்
கண்களின் உள்ளே பாருங்கள்
முழுமையை உணருங்கள்
மெய்யுணர்வு பெறுங்கள்
சிந்தித்து செயலாற்றுங்கள்...!!!
Comments
Post a Comment