நமது இலக்கை நாம் அடைந்து விடுவோம் என்று எப்போதும் நேர்மறையாகச் சிந்திப்பவர்கள் உறுதியாக அந்த இலக்கை அடைந்து விடுவர்.
ஏனெனில் அவர்களது நேர்மறை எண்ணம் அவர்களுக்கு அளிக்கும் உந்துதலும் ஆற்றலும் இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும்.
நம்மால் முடியாது என்ற எதிர்மறையாக எண்ணும் போது அந்த எண்ணமே நம்மை வீழ்த்தி விடும்.
இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய வாழ்க்கைப் பயணமானது மிகவும் கடுமையானது.
வெற்றி என்பது குருட்டு நம்பிக்கையால் அமையாது. அது கடும் உழைப்பால்தான் சாத்தியப்படும்.
வெற்றி பெறவேண்டும் என்னும் தாகம் உங்கள் மனதில் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
நம்பிக்கை நிறைந்தவர் ஒரு நாளும் யார் முன்னேயும் மண்டியிட்டது இல்லை.
எந்த ஒரு காரியத்தையும் நம்பிக்கையோடு செய்தால் யார் உதவியும் தேவையில்லை.
நம்பிக்கை தான் வாழ்க்கை
முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். நாளையப் பொழுது நல்லபடி விடியட்டுமே.
இனிய இரவு வணக்கம்
No comments:
Post a Comment