இரவு நேர சிந்தனை
துன்பமும் தோல்விகளும் நீ விரும்பாமலே உன்னைத்தேடி வந்ததைப்போல்
நீ விரும்பிய மகிழ்ச்சியும் ஓர் நாள் வந்தே சேரும் அதுவே இயற்கை நியதி.
காய்ந்து உதிர்ந்த இலை தான்
ஆனால்
அது நீரில் தத்தளிக்கும் எறும்பின்
உயிரை காக்கும்
எதையும் யாரையும் எப்போதும் இகழ்வாய்
எண்ணி விடாதீர்கள்.
வாக்குவாதம் செய்பவர்கள் வாழ்க்கையில்
ஜெய்ப்பதில்லை.
வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் வாக்குவாதம்
செய்வதில்லை.
பிடிமானம் இருந்தால் தான் நிலையாக
நிற்க முடியும்.
பிடிமானத்தோடு வாழப்பழகு.
உனக்கான பாதையில் எதிர் வரும் தேவையற்ற விமர்சனம் என்னும் தடைகளை தாண்டி முன்னேறி செல்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். நாளையப் பொழுது நல்லபடி விடியட்டுமே.
இனிய இரவு வணக்கம்
A Big Collection of Wishes, Wallpapers, quotes for your Friends, families, Relatives.......
Comments
Post a Comment